January 5 , 2026
3 days
56
- சொத்துப் பதிவு மற்றும் பிறழ்வு விதிகள் குறித்து சமிமுல்லா மற்றும் பீகார் மாநில அரசு இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- சொத்துப் பதிவுக்கு பிறழ்வுச் சான்றினைக் கட்டாயமாக்கிய பீகார் பதிவு விதிகளை (2019) நீதிமன்றம் ரத்து செய்தது.
- ஓர் ஆவணத்தைப் பதிவு செய்வது சொத்தின் உரிமை அல்லது பட்டையத்திலிருந்து வேறுபட்டது என்று அது கூறியது.
- உரிமை மற்றும் பட்டையம் பற்றிய விவாதங்களை துணைப் பதிவாளர்களால் அல்லாமல், உரிமையியல் நீதிமன்றங்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
- பதிவு என்பது உரிமையின் மறுக்கக்கூடிய அனுமானத்தை மட்டுமே உருவாக்குகிறது, இறுதி ஆதாரத்தினை அல்ல.
- மோசமான கணக்கெடுப்புகள் மற்றும் பதிவு ஒருங்கிணைப்பு இல்லாததால் நிலப் பதிவுகளில் உள்ள கட்டமைப்பு சார் சிக்கல்களை இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.
Post Views:
56