இந்தியாவும் இந்தோனேசியாவும் வங்காள விரிகுடாவில் “சமுத்திர சக்தி” என்ற ஒரு இருதரப்புக் கடல் பயிற்சியை மேற்கொண்டுள்ளன.
இந்தக் கூட்டுப் பயிற்சியானது கடல் போர்ப் பயிற்சிகள், வான் பாதுகாப்புப் பயிற்சிகள், துப்பாக்கி சுடும் பயிற்சிகள், ஹெலிகாப்டர் நடவடிக்கைகள் மற்றும் எதிரிக் கப்பலுக்குள் சென்று தாக்கி அழிக்கும் ராணுவ செயல்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
கருடா சக்தி என்பது இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.