TNPSC Thervupettagam

சமுத்திர மந்தன் திட்டம்

August 3 , 2026 19 days 89 0
  • 2030-31 ஆம் நிதியாண்டு வரை செயல்படுத்துவதற்கான 'சமுத்திர மந்தன்' – தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு மத்திய துறைத் திட்டமாகும் என்பதோடு ஆழ்கடல் மற்றும் அதி-ஆழ்கடல் ஆய்வுக்காக ₹84,084 கோடி நிதி ஒதுக்கீடு இதற்கு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, கடலோர ஹைட்ரோ கார்பன் வளங்களை ஆராய்வதையும், 600 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய்க்குச் சமமான (MMTOE) இருப்புக்களை இலக்காகக் கொள்வதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது முப்பரிமாண நில அதிர்வு ஆய்வுகள், கடல்சார் துளையிடும் உள்கட்டமைப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் சேவை மண்டலத்தை அமைப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • கிருஷ்ணா-கோதாவரி, காவிரி, மகாநதி மற்றும் அந்தமான் பகுதிகள் உள்ளிட்ட இந்தியாவின் கடல் படுகைகள், பயன்படுத்தப்படாத குறிப்பிடத்தக்க எண்ணெய் மற்றும் எரிவாயு திறனைக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்