இயங்கலையில் "போலிச் செய்திகள்" பரவுதல் குறித்த ஒரு பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்காக என்ற சமூக ஊடகத் தளங்களுக்கான பாதுகாப்பு விதிகள் என்ற கருத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது.
பாதுகாப்பு விதிகள் என்பது மூன்றாம் தரப்பு பயனர்கள் எந்தவொருச் சட்டவிரோத உள்ளீடுகளையும் பதிவிட அனுமதிக்கும் தனிப்பட்ட வலைதளங்களைச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளிலிருந்துப் பாதுகாக்கும் ஒரு சட்டப் பூர்வப் பாதுகாப்பு விதிமுறை ஆகும்.
இப்பாதுகாப்பு விதிகள் ஆனது அந்தத் தளங்களை, அவற்றில் வேறொருவரால் இடப் பட்ட பதிவுகளுக்கான எந்தவொரு குற்றவியல் நடவடிக்கையிலிருந்தும் இயல்பாகவே பாதுகாக்கிறது.
2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவானது, இடை நிலை அமைப்புகளுக்கும் இதே போன்ற பாதுகாப்புகளை வழங்குகிறது.
இந்தியாவில், இடைநிலை நிறுவனங்கள் தங்கள் வலைதளத்தில் சட்ட விரோதமான உள்ளடக்கம் குறித்த "ஒரு உண்மையானத் தகவலை" பெற்றால், ஒரு குறிப்பிட்டக் காலத்திற்குள் உள்ளடக்கத்தினை அகற்றுவதற்கு அவை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், 79வது பிரிவின் கீழ் சட்டப்பூர்வப் பொறுப்பேற்பிலிருந்துப் பாதுகாப்பினை இழக்கும்.