சமூக நல்வாழ்விற்கான ஆண்டினுடைய மிகவும் சிறந்த நபர்
June 4 , 2018 2633 days 826 0
சமூக நல்வாழ்வுக் களத்தில் இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் ஆற்றிய மகத்தான மாபெரும் பங்களிப்பிற்காக தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா அமைப்பால் யுவராஜ் சிங்கிற்கு சமூக நல்வாழ்விற்கான ஆண்டினுடைய மிகவும் சிறந்த நபர் விருது (most inspiring icon of the year for Social Welfare) வழங்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டின் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த யுவராஜ் சிங் உலகக் கோப்பைக்குப் பிறகு புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப் பட்டார்.
புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு யுவராஜ் சிங் புற்று நோயைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்திருக்கும் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கி உதவுவதற்காகவும் அவர் “You we can” எனும் அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.