தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நடத்தும் விடுதிகளும் இனி 'சமூக நீதி விடுதிகள்' என்று அழைக்கப்படவுள்ளது.
சாதி மற்றும் சமய அடையாளங்களை நீக்கி இந்த மாணவர்களிடையே சமத்துவத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 1.79 லட்சம் ஏழ்மை நிலையில் உள்ள மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில், மாநில அரசு 2,739 விடுதிகளை நடத்தி வருகிறது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சாதி வேறுபாடுகளைக் குறைப்பதற்காக என ஓய்வு பெற்ற நீதிபதி K. சந்துரு தலைமையிலான குழு வழங்கிய பல்வேறு பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.