ஜல் சக்தி அமைச்சகமானது கடைநிலை அளவிலான நீர் மேலாண்மைத் தலைமைத்துவத்திற்காக நீர், சுகாதாரம் மற்றும் தூய்மை (WaSH) வீரர்களைக் கௌரவித்தது.
இந்த அங்கீகாரம் புது டெல்லியில் நடைபெற்ற ஒரு சம்வாத் சமாரோஹ் எனும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 58 WaSH வீரர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட்டது.
தூய்மை பாரத இயக்கம் (கிராமப்புறம்) திட்டத்தின் கீழ், 'ஹர் கர் ஜல்' சான்றிதழ் மற்றும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) பிளஸ் மாதிரி அந்தஸ்து பெற்ற ஸ்வச் சுஜல் கிராமங்களிலிருந்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது, “Peyjal: Jan Shakti Ki Abhivyakti – Volume II” என்ற தலைப்பிலான ஒரு கையேடும் வெளியிடப்பட்டது.