சமூக மேம்பாட்டுக்கான உலக உச்சி மாநாடு ஆனது கத்தாரின் தோஹாவில் நடத்தப் பட்டது.
சமூக நீதிக்கான உலகளாவிய கூட்டணி குறித்த சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் இந்தியா பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.
இந்த உச்சி மாநாட்டின் போது சமூக மேம்பாட்டின் மூன்று தூண்களை வலுப்படுத்துவது குறித்த உயர்மட்ட வட்ட மேசை மாநாடு நடைபெறும்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் இந்திய வணிக மற்றும் வல்லுநர்கள் சபை (IBPC) ஆகியவை தேசிய தொழில் துறை சேவை (NCS) வலை தளம் குறித்த நிகழ்வினையும் ஏற்பாடு செய்தன.