சட்டப்பூர்வ பாதுகாப்பு இல்லாவிட்டாலும், பந்தேல்கண்ட் (உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம்) பகுதியில் உள்ள புனிதத் தோப்புகள் (தேவஸ்தானங்கள்) அருகிலுள்ள சீரழிந்த காடுகளை விட அதிக பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பதாக 2026 ஆம் ஆண்டு ஆய்வு கண்டறிந்துள்ளது.
அருகிலுள்ள சிதைவடைந்த காடுகளில் 40–51 தாவர இனங்கள் மட்டுமே காணப்பட்ட நிலையில், பல மருத்துவ தாவரங்கள் உட்பட 70–72 தாவர இனங்கள் புனிதத் தோப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சமூகம் சார்ந்த பாதுகாக்கப்பட்ட காடுகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மூலம் பாதுகாக்கப் படுகின்றன. பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் பழங்குடியினர் மற்றும் தலித் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
நில ஆக்கிரமிப்பு, சுரங்கத் தொழில், மாறிவரும் மத நடைமுறைகள் மற்றும் சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாமை ஆகியவை இதன் முக்கிய அச்சுறுத்தல்களாகும்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், உச்ச நீதிமன்றம் புனிதத் தோப்புகள் குறித்து நாடு தழுவிய அளவீடு நடத்த உத்தரவிட்டதுடன், 2006 ஆம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தின் கீழ் உள்ளூர் சமூகங்களை அதன் பாதுகாவலர்களாக அங்கீகரிக்க பரிந்துரைத்தது.