'சமூகப் பங்குச் சந்தைகளை' உருவாக்குவதற்கு சாத்தியமான கட்டமைப்புகள் மற்றும் ஒழுங்கு முறைகளைப் பரிந்துரைக்க இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India - SEBI) ஆனது ஒரு உயர் மட்டக் குழுவை நியமித்துள்ளது.
இந்த உயர் மட்டக் குழுவிற்கு இஷாத் உசேன் தலைமை தாங்குவார்.
இந்த சமூகப் பங்குச் சந்தைகள் சமூக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் பட்டியலிடப்படுவதற்கும் அதன் மூலம் நிதியைத் திரட்டுவதற்கும் உதவும்.
இவை மூலதனச் சந்தைகளை மக்களிடம் நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதையும் பல்வேறு சமூக நல நோக்கங்களைப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.