TNPSC Thervupettagam

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய விரிவாக்கம்

January 27 , 2026 10 hrs 0 min 25 0
  • பகுதிநேர ஆசிரியர்களுக்கான சிறப்பு மதிப்பெண்கள் மற்றும் பல தொழிலாளர் குழுக்களுக்கான ஓய்வூதியத்தில் அதிகரிப்பை தமிழக முதல்வர் அறிவித்தார்.
  • நிரந்தர ஆசிரியர் பணியமர்த்துதலில் அனுபவத்தின் அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதோடு விரைவில் அதற்கான அரசு உத்தரவு வெளியிடப்படும்.
  • மாநில அரசு ஏற்கனவே பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் மே மாத சம்பளத்தை வழங்கியுள்ளது என்பதோடு இது முன்னர் வழக்கமான ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
  • பிப்ரவரி 4, 2026 முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கூடுதலாக 1.80 லட்சம் பேர் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்.
  • ஓய்வூதியப் பலன்கள் 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், மதிய உணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பஞ்சாயத்து ஒன்றிய எழுத்தர்களுக்கான ஓய்வூதியம் 2,000 ரூபாயிலிருந்து 3,400 ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்