TNPSC Thervupettagam

சமையல் எண்ணெய்களுக்கான தேசிய திட்டம்

August 21 , 2021 1448 days 610 0
  • சமையல் எண்ணெய்களுக்கான ஒரு தேசிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • அடுத்த 5 ஆண்டுகளில் உள்நாட்டிலேயே பாமாயில் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த ஒப்புதலானது வழங்கப்பட்டுள்ளது.
  • இறக்குமதி மீது இந்தியா சார்ந்திருக்கும் சூழ்நிலையைத் தளர்த்த இது உதவும்.
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆகஸ்ட் 15 அன்று இந்தப் புதிய மத்திய அரசுத் திட்டத்தினை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டம் குறித்த தகவல்கள்

  • சமையல் எண்ணெய்களுக்கான தேசிய திட்டமானது மத்திய அரசின் நிதி உதவியினைப் பெறும் ஒரு திட்டமாகும்.  
  • இத்திட்டமானது ‘தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் – பாமாயில் திட்டத்தினை’ உள்ளடக்கியதாக இருக்கும்.
  • இது ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் வரிசையில் தொடங்கப்பட்டதாகும்.
  • சமையல் எண்ணெய்களுக்கான தேசிய திட்டமானது 2025 – 26 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 6.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பாமாயில் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கோடு தொடங்கப்பட்டது.
  • இது 10 லட்சம் ஹெக்டேர் எனும் இலக்கை அடைய முனைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்