TNPSC Thervupettagam

சம்ரித் கிராம் பிஜிட்டல் சேவை முன்னெடுப்பு

March 17 , 2026 13 hrs 0 min 18 0
  • ஒருங்கிணைந்த கிராமப்புற சேவைகளை வழங்குவதற்காக மத்தியப் பிரதேசத்தின் உம்ரி கிராமத்தில் 'சம்ரித் கிராம் பிஜிட்டல் சேவை' சோதனைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இது கிராமப்புறங்களில் "பிஜிட்டல்" (நேரடியான + டிஜிட்டல்) முறையில் சேவைகளை வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாகும்.
  • இத்திட்டம் பாரத்நெட் கிராமப்புற அகலப்பட்டை வலையமைப்பைப் பயன்படுத்தி தொலைத்தொடர்புத் துறையால் செயல்படுத்தப்படுகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் 'சம்ரித்தி மையங்கள்' அமைக்கப்படுகின்றன என்பதோடு இவை கல்வி, தொலைத்தொடர்பு மருத்துவச் சேவை, விவசாய ஆலோசனைகள், மின்-ஆளுமை மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் கிராமப்புறச் சேவை மையங்களாகச் செயல்படும்.
  • ஒருங்கிணைந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு மூலம் கிராமங்களில் டிஜிட்டல் அணுகல் மற்றும் பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்