சம்வேத்னா (உணர்ச்சி மேம்பாடு மற்றும் தேவையான ஏற்பு மூலம் மனநல பாதிப்பு குறித்த உணர்திறன் நடவடிக்கை) ஒரு கட்டணமில்லாத தொலைபேசி ஆலோசனைச் சேவையாகும்.
கோவிட்-19 தொற்றின் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கருத்துரை வழங்கல் மற்றும் உள-சமூக ஆதரவை வழங்குவதற்காக வேண்டி கட்டணமில்லாத தொலைபேசி ஆலோசனை உதவி எண்ணை தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையமானது அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த கட்டணமில்லாத தொலைபேசி ஆலோசனை உதவி எண்ணானது 1800-121-2830 ஆகும்.
இது இந்தியா முழுவதிலும் உள்ள குழந்தைகளுக்குப் பல்வேறு பிராந்திய மொழிகளிலும் தனது சேவையை (ஆதரவு) அளிக்கும்.