சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்தின் 44வது சந்திப்பு
June 16 , 2021 1480 days 1012 0
சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்தின் 44வது சந்திப்பானது 2021 ஆம் ஆண்டு ஜுன் 12 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கோவிட்-19 சார்ந்த மருத்துவ வழங்கீடுகளுக்கு வரிவிலக்கு வழங்குவது பற்றி ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையினைச் சரக்கு மற்றும் சேவை வரி மன்றமானது (Goods and Service Tax Council) ஏற்றுக் கொண்டது.
சரக்கு மற்றும் சேவை வரி வீதத்தில் பல (GST) மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவை 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 வரை செயலில் இருக்கும்.
28 சதவீதமாக இருந்த அவசர ஊர்திகளுக்கான GST வீதமானது 12 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.
கோவிட்-19 சோதனைக் கருவிகள், மருத்துவ ஆக்சிஜன் மற்றும் செயற்கை சுவாசக் கருவிப் போன்றவற்றிற்காக GST வீதமானது 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது.
கை சுத்திகரிப்பான் (கிருமிநாசினி) மீதான GST வீதமானது 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையைப் பரிசோதிக்கும் கருவிகள் மீதான GST வீதமானது 18 சதவீதம் என்ற அளவிலிலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் அளவீட்டுக் கருவிகளுக்கான (பல்ஸ் ஆக்சிமீட்டர்) GST வீதமானது (தனிநபர் இறக்குமதி உட்பட) 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.
சில குறிப்பிட்ட அழற்சி கண்டறியும் கருவிகள் மீதான வரி வீதமானது 12 சதவீதம் என்ற அளவிலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தகனம் செய்ய பயன்படுத்தப்படும் எரிவாயு (அ) மின்சார (அ) இதர உலைகள் மீதான (நிறுவல் செலவினம் உட்பட) GST வரி வீதமானது 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
டோக்கிலிசுமாப் (Tocilizumab) மற்றும் ஆம்போடெரிசின் B (Amphotericin B) உள்ளிட்ட கோவிட்-19 சிகிச்சையுடன் தொடர்புடைய மருந்துகள் மீது GST வரி வீதம் விதிக்கப் பட மாட்டாது.
முன்னதாக இதற்கான GST வரி வீதமானது 5% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஹெபாரின் மற்றும் ரெம்டெஸ்வீர் போன்ற இரத்த உறைவுத் தடுப்பு மருந்துகள் மீதான GST வீதமானது 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
செயற்கை சுவாசக் கவசங்கள் (அ) கேனுலா (அ) தலைக்கவசம் மீது 5% GST வீதமானது விதிக்கப் படும்.