சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்
February 24 , 2023 877 days 374 0
சரக்கு மற்றும் சேவை வரிச் சபையானது, டெல்லியில் முதன்மை அமர்வுடனும் பிற மாநிலங்களில் அதற்கான கிளை அமர்வுகளுடன் கூடிய தேசிய சரக்கு மற்றும் சேவை வரி சார்ந்த வழக்குகளுக்கான மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தினை நிறுவ முடிவு செய்துள்ளது.
ஒரு மாநிலத்தில் உள்ள அமர்வுகளின் எண்ணிக்கையானது அம்மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையின் தேவைகளின் அடிப்படையில் அந்த மாநில அரசினால் தீர்மானிக்கப் படும்.
இந்த மேல்முறையீட்டு அமைப்பானது, ஓர் உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியினுடைய தலைமையில் செயல்படும்.
50 இலட்சத்திற்கும் குறைவான வரி சிக்கல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு ஒற்றை உறுப்பினர் கொண்ட ஒரு அமர்வானது நிர்ணயிக்கப்படும்.
50 இலட்சத்திற்கும் மேலான வரி சிக்கல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு இரட்டை உறுப்பினர்கள் கொண்ட ஒரு அமர்வானது நிர்ணயிக்கப்படும்.