TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்

March 29 , 2023 873 days 372 0
  • சரக்கு மற்றும் சேவை வரியின் கீழான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தினை அமைப்பதற்கு வழி வகுக்கும் வகையில், நிதி மசோதாவில் திருத்தங்களை மேற்கொள்ள மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திருத்தங்களின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் சரக்கு மற்றும் சேவை வரி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் அமர்வுகள் அமைக்கப்படும்.
  • இந்த அமர்வில் இரண்டு நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தச் செய்யும் வகையில் இரண்டு தொழில்நுட்ப உறுப்பினர்கள் ஆகியோர் இடம் பெறுவர்.
  • டெல்லியில் இதன் முதன்மை அமர்வு செயல்படும்.
  • முதன்மை அமர்வு ஆனது ஒரு தலைவர், ஒரு நீதித்துறை உறுப்பினர் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இரண்டு தொழில் நுட்ப உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டிருக்கும்.
  • தற்போது, மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் இல்லாத நிலையில், வரி செலுத்துவோர் உயர் நீதிமன்றங்களில் நீதிப் பேராணை மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்