இந்தியாவின் ஏற்றுமதி சரக்குகள் கையாளும் பகுதிங்களின் (Land Port) செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக நிலத் துறைமுக மேலாண்மை அமைப்பை (LPMS) மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
LPMS என்பது சர்வதேச நில எல்லைகளுக்கு இடையேயான சரக்கு, பயணிகள் மற்றும் வாகனங்களின் இயக்கத்தை நிர்வகிப்பதற்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் ஆகும்.
இது முன்பதிவு, இணையவழியில் பணம் செலுத்துதல், சரக்கு கண்காணிப்பு மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகள் போன்ற சேவைகளை வழங்குகிறது.
இந்த அமைப்பு இந்தியச் சுங்க மின்னணு நுழைவுவாயில் (ICEGATE) மற்றும் ஒருங்கிணைந்த தளவாட இடைமுக தளம் (ULIP) ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப் படும்.
இந்தியாவின் ஏற்றுமதி சரக்குகள் கையாளும் பகுதிகள் வங்காளதேசம், நேபாளம், பூடான், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் பயணத்தை எளிதாக்குகின்றன.