சரக்குந்துகளுக்கான பசுமை இல்ல வாயு உமிழ்வு - குறைப்பு
February 23 , 2019 2417 days 822 0
ஐரோப்பிய ஒன்றியமானது புதிய சரக்குந்துகள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கார்பன் டை-ஆக்ஸைடு உமிழ்வுகளை 2030 ஆம் ஆண்டில் 30 சதவிகிதமாக குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது.
முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றிய அளவில் சரக்குந்துகளுக்கான கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வுக் குறைப்பு இலக்குகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த இந்த ஒப்பந்தம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தமானது சுழிய மற்றும் குறைந்த உமிழ்வு கொண்ட சரக்குந்துகளை ஊக்குவித்தல் ஆகியவற்றையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்குவரத்து தொடர்பான உமிழ்வுகளில் நான்கில் ஒரு பங்கு (1/4) சரக்குந்துகளிலிருந்து வெளிப்படுகின்றது. தற்பொழுது வரை கனரக வாகனங்களிலிருந்து வெளியேறும் உமிழ்வுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எந்தக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.
மேலும், மகிழுந்து மற்றும் கூண்டு வண்டிகளிலிருந்து வெளியேறும் உமிழ்வுகளைக் குறைப்பதற்கான இலக்குகளையும் ஐரோப்பிய ஒன்றியம் டிசம்பரில் ஒப்புக் கொண்டுள்ளது.