TNPSC Thervupettagam

சரத்சந்திர சட்டோபாத்யாயின் 150 ஆண்டுகள்

September 17 , 2026 4 days 106 0
  • வங்காள எழுத்தாளர் சரத்சந்திர சட்டோபாத்யாய் அவரது 150வது பிறந்தநாளில் நினைவு கூரப் பட்டார்.
  • 1876 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று வங்காளத்தில் உள்ள தேபானந்தபூரில் பிறந்த இவர், ஒரு வங்காள நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார்.
  • தேவதாஸ், ஸ்ரீகாந்தா, பரிணீதா, சோரித்ரோஹின் மற்றும் பதேர் தாபி ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.
  • அவரது படைப்புகள் 19 ஆம் நூற்றாண்டின் இந்தியாவை, குறிப்பாக கிராமப்புற வங்காள சமுதாயத்தை சித்தரித்தன, மேலும் சமூகப் பிரச்சினைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை எடுத்துரைத்தன.
  • அவர் 13 ஆண்டுகள் பர்மாவில் (மியான்மர்) வாழ்ந்தார் மற்றும் 1916 ஆம் ஆண்டில் முழு நேர எழுத்தாளராக மாறுவதற்காக கல்கத்தா திரும்பினார்.
  • 1926 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பதேர் தாபி (Pather Dabi), அதன் புரட்சிகரமான கருத்துரு காரணமாக பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டது.
  • அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருந்து ஜகத்தாரிணி தங்கப் பதக்கத்தையும், டாக்கா பல்கலைக்கழகத்தில் இருந்து இலக்கியத்திற்கான முனைவர் (கௌரவ) பட்டத்தையும் பெற்றார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்