TNPSC Thervupettagam

சரல் - அரசு மேற்கூரை சூரிய ஒளி ஈர்ப்புக் குறியீடு

August 23 , 2019 2174 days 692 0
  • மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கான மத்திய ராஜாங்க இணையமைச்சர் சரல் (SARAL - State Rooftop Solar Attractiveness Index) என்ற அரசு மேற்கூரை சூரிய ஒளி ஈரப்புக் குறியீட்டைத் தொடங்கி வைத்தார்.
  • சரல் ஆனது மேற்கூரை வளர்ச்சிக்கான மாநிலங்களின் சிறப்பம்சத் தன்மையின் அடிப்படையில் இந்திய மாநிலங்களை மதிப்பீடு செய்கின்றது.
  • மேற்கூரை சூரிய ஒளிப் பயன்படுத்துதலை எளிதாக்குவதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட மாநில அளவிலான நடவடிக்கைகள் குறித்த விரிவான கண்ணோட்டத்தை வழங்கும் இதே வகையைச் சேர்ந்த முதலாவது குறியீடு இதுவாகும்.
  • சரல் குறியீட்டில் கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து இந்தக் குறியீட்டில் தெலுங்கானா, குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • சரலானது மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் துறை அமைச்சகம், சக்தி நீடித்த ஆற்றல் அமைப்பு, அசோசெம், மற்றும் எர்னஸ்ட் & யங் ஆகியவற்றினால் கூட்டாக இணைந்து உருவாக்கப்பட்டது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்