மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கான மத்திய ராஜாங்க இணையமைச்சர் சரல் (SARAL - State Rooftop Solar Attractiveness Index) என்ற அரசு மேற்கூரை சூரிய ஒளி ஈரப்புக் குறியீட்டைத் தொடங்கி வைத்தார்.
சரல் ஆனது மேற்கூரை வளர்ச்சிக்கான மாநிலங்களின் சிறப்பம்சத் தன்மையின் அடிப்படையில் இந்திய மாநிலங்களை மதிப்பீடு செய்கின்றது.
மேற்கூரை சூரிய ஒளிப் பயன்படுத்துதலை எளிதாக்குவதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட மாநில அளவிலான நடவடிக்கைகள் குறித்த விரிவான கண்ணோட்டத்தை வழங்கும் இதே வகையைச் சேர்ந்த முதலாவது குறியீடு இதுவாகும்.
சரல் குறியீட்டில் கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து இந்தக் குறியீட்டில் தெலுங்கானா, குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
சரலானது மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் துறை அமைச்சகம், சக்தி நீடித்த ஆற்றல் அமைப்பு, அசோசெம், மற்றும் எர்னஸ்ட் & யங் ஆகியவற்றினால் கூட்டாக இணைந்து உருவாக்கப்பட்டது.