இதைக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority) வெளியிட்டு உள்ளது.
இது ஒரு நிலையான தனிநபர் கால ஆயுள் காப்பீட்டுத் தயாரிப்பு (individual term life insurance product) ஆகும்.
இது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது தேர்விற்கான தகவல்களையும் மற்றும் தவறான விற்பனையைக் குறைக்கவும் உதவும்.
இதில் குறைந்தபட்ச அளவில் உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையானது ரூ.5 லட்சமாகவும், அதிகபட்ச காப்பீட்டுப் பாதுகாப்புத் தொகையானது ரூ.25 லட்சமாகவும் வைக்கப் பட்டு உள்ளது.
18 முதல் 65 அகவைக்கு உட்பட்ட எவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.
காப்பீட்டை வழங்கும் நிறுவனம் எதுவாக இருப்பினும் அவர்கள் வாங்க இருக்கும் தயாரிப்பு (product) ஒரே மாதிரியாக இருப்பதால் ஆயுள் காப்பீட்டை முதன்முறையாக வாங்குபவர்களுக்குஇத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.