TNPSC Thervupettagam

சரஸ்வதி மஹால் நூலகம்

August 11 , 2025 15 hrs 0 min 62 0
  • தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மஹால் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நூலகமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • இந்த நூலகமானது, தற்போது 1950 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது நூலக விதிகளின் கீழ் உதவி பெறும் நூலகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • அரண்மனை நூலகத்தின் நூல் இருப்புகள்/சேகரிப்புகளின் தொடக்கமானது, பதினாறாம் நூற்றாண்டில் பொது சகாப்தம் (கி.பி) 1535 ஆம் ஆண்டு முதல் 1675 ஆம் ஆண்டு வரையிலான தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சியாளர்களின் கீழ் தொடங்கப் பட்டதாக நம்பப்படுகிறது.
  • மராட்டிய ஆட்சியாளர்கள் பின்னர் கி.பி 1798 ஆம் ஆண்டு முதல் 1832 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி செய்த இரண்டாம் இராஜா சரபோஜியின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளுடன் அந்த நூல் இருப்பினை விரிவுபடுத்தினர்.
  • இரண்டாம் இராஜா சரபோஜி, அந்த நூலகத்திற்காக பல புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை வாங்கிய பிரபல புத்தகப் பிரியர் ஆக அறியப்படுகிறார்.
  • இந்த நூலகமானது, வரலாற்றுச் சிறப்புமிக்க தஞ்சாவூர் அரண்மனைக்குள் அமைந்து உள்ளது.
  • இது எண்பத்தி ஒராயிரத்து நானூறுக்கும் மேற்பட்டப் புத்தகங்களையும் நாற்பத்தேழாயிரத்து ஐநூறு பனை ஓலை மற்றும் காகிதச் சுவடிகள் /கையெழுத்துப் பிரதிகளையும் கொண்டுள்ளது.
  • இராஜாவின் தனிப்பட்ட புத்தகச் சேகரிப்பில் நான்காயிரத்து ஐநூற்று முப்பது புத்தகங்கள் உள்ளன.
  • கையெழுத்துப் பிரதிகள் தமிழ், சமஸ்கிருதம், மராத்தி, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளில் உள்ளன.
  • பனை ஓலைகளில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களில் கிரந்தம், தேவநாகரி, நந்தி நாகரி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா ஆகியவை அடங்கும்.
  • தமிழ் மொழித் தொகுப்பில் சைவ, வைணவ மற்றும் சமண சமயப் படைப்புகள், அரிய மருத்துவ நூல்கள் ஆகியவை அடங்கும்.
  • சரஸ்வதி மஹால் நூலகம் என்பது உலகின் மிகப்பெரிய கிழக்கத்திய/ஓரியண்டல் கையெழுத்துப் பிரதி நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • இது ஆசியாவின் பழமையான நூலகங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்