TNPSC Thervupettagam

சராக்ஸ் ஸ்பாசினோ நகரம்

February 25 , 2026 2 hrs 0 min 39 0
  • சராக்ஸ் ஸ்பாசினோ நகரமானது  தெற்கு மெசபடோமியாவில், இன்றைய ஈராக்கில் உள்ள டைக்ரிஸ் நதிக்கு அருகில் உள்ள ஒரு பழங்கால நகரமாகும் என்பதோடு இது சமீபத்தில் ஒரு மேம்பட்ட தொல்பொருள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் கண்டுபிடிக்கப் பட்டது.
  • கிமு 324 இல் மகா அலெக்சாண்டரின் இறுதி ஆண்டுகளில் நிறுவப்பட்ட இந்த நகரம் முக்கிய வர்த்தகப் பாதைகளின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக முதலில் அலெக்ஸாண்ட்ரியா என்று பெயரிடப்பட்டது.
  • வெள்ளம் மற்றும் நிலையற்ற அரசியல் தன்மை அசல் குடியேற்றத்தை சேதப்படுத்திய பின்னர் இது பின்னர் மீண்டும் கட்டப்பட்டு, செலூசிட் அல்லது சாரசீன் ஆட்சியின் கீழ், சாராக்ஸ் ஸ்பாசினோ என மறுபெயரிடப்பட்டது.
  • நதி மற்றும் நிலப் பாதைகளை இணைக்கும் ஒரு முக்கிய வர்த்தக மையமாகச் செயல் பட்ட இந்த நகரம், அரேபியா, பெர்சியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிக்கு இடையேயான வர்த்தகத்தை எளிதாக்கியது.
  • நவீன ஆராய்ச்சியாளர்கள் ட்ரோன்கள் மற்றும் காந்தமானிகள் போன்ற உள்நுழையத் தேவை இல்லாத கருவிகளைப் பயன்படுத்தி 500 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவை டிஜிட்டல் முறையில் வரைபடமாக்கியதன் மூலம் பெரிய அளவிலான அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளாமலேயே புதையுண்ட சுவர்கள் மற்றும் முக்கியக் கட்டமைப்புகளை வெளிப்படுத்தினர்.
  • மெசபடோமியாவில் உள்ள கிரேக்க நாகரீக நகர்ப்புற மையங்களின் மிகப்பெரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் இந்த முக்கியமான மறுகண்டுபிடிப்பு என்பது அலெக்ஸாண்ட்ரியத்திற்குப் பிந்தைய வர்த்தகம் மற்றும் நிர்வாகம் குறித்த புரிதலை மறுவடிவமைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்