சர்க்கரைக் கழிவுப் பாகுகளிலிருந்து பொட்டாஷ் உரம் தயாரிப்பு
March 8 , 2024 526 days 334 0
சர்க்கரை ஆலைகள் இனி சர்க்கரைக் கழிவுப் பாகுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பொட்டாஷ் உரத்தினை உர விற்பனை நிறுவனங்களுக்கு விற்று கூடுதல் வருவாயைப் பெற இயலும்.
மேலும் அத்தகைய விற்பனை மீது உர ஊட்டம் அடிப்படையிலான மானியங்களையும் அவை பெற இயலும்.
பொட்டாசியம் நிறைந்த உரமான PDM, கரும்பு உற்பத்தி அடிப்படையிலான எத்தனால் தொழிற்துறையின் துணை விளைபொருள் ஆகும்.
இது சர்க்கரைக் கழிவுப் பாகு வடிப்பான்களில் உள்ள (சாம்பல்) கழிவில் இருந்து பெறப் படுகிறது.
தற்போது, தனது நாட்டின் உர உற்பத்திக்குத் தேவையான 100% பொட்டாஷினை (Muriate of Potash-MOP என்ற வடிவில்) இந்தியா இறக்குமதி செய்கிறது.
வடிப்பான்கள் ஆனது, எத்தனால் உற்பத்தியின் போது எஞ்சிய திரவக் கழிவு எனப்படும் கழிவு இரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன என்ற நிலையில். இவற்றை எரித்து சாம்பல் உருவாக்கப்படுகிறது.
இந்த சாம்பலைப் பதப்படுத்தி 14.5% பொட்டாஷ் உட்கூறு கொண்ட PDM உரத்தினை உருவாக்கப் படுகிறது.
60% அளவு கொண்ட பொட்டாஷ் உள்ள MOP உரத்திற்கு மாற்றாக விவசாயிகள் இதைப் பயன்படுத்தலாம்.