சர்வதேச அடிமை வர்த்தகம் மற்றும் ஒழிப்பு நினைவு தினம் - ஆகஸ்ட் 23
August 24 , 2022 1094 days 435 0
காலனித்துவ ஆட்சியின் போது அட்லாண்டிக் கடல் கடந்து மேற்கொள்ளப்பட்ட அடிமை வர்த்தகத்தினால் பாதிக்கப்பட்ட, மில்லியன் கணக்கான அப்பாவி உயிர்களுக்கு எதிரான இந்த நடைமுறையை நினைவு கூரும் வகையில் இந்தத் தினம் என்பது அனுசரிக்கப்படுகிறது.
இந்தத் தினத்திற்கான முதல் முக்கியத்துவம் யுனெஸ்கோ அமைப்பினால் கொடுக்கப் பட்டது.
சர்வதேச அடிமை வர்த்தகம் முதன்முதலில் 1807 ஆம் ஆண்டு ஒழிக்கப் பட்டது.
இந்தத் தினமானது முதன் முதலில் ஹைதி (ஆகஸ்ட் 23, 1998) மற்றும் செனகலில் உள்ள கோரி தீவு (ஆகஸ்ட் 23, 1999) போன்ற நாடுகளில் அனுசரிக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'துணிவின் கதைகள்: அடிமைத் தனத்திற்கு எதிர்ப்பு மற்றும் இனவெறிக்கு எதிரான ஒற்றுமை' என்பதாகும்.