சர்வதேச அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பு தினம் - டிசம்பர் 12
December 15 , 2018 2437 days 780 0
சர்வதேச அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பு தினமானது ஆண்டுதோறும் டிசம்பர் 12 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இது ஒருவரையும் விட்டு விடாமல் சர்வதேச அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பை அடைய வலுவான, மிகவும் நியாயமான சுகாதார அமைப்பு முறைகளுக்கு அழைப்பு விடுப்பதற்காக பல்வேறு பங்குதாரர்களைத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டது.
இவ்வருடத்திற்கான கருத்துரு “அனைவருக்குமான சுகாதார பாதுகாப்புக்காக ஒன்றிணைதல் : இது கூட்டு நடவடிக்கைக்கான நேரம் (Unite for Universal Health Coverage: Now is the Time for Collective Action)” என்பதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையானது 2017ல் தீர்மானம் நிறைவேற்றி டிசம்பர் 12ஐ அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பிற்கான சர்வதேச தினமாக பிரகடனம் செய்தது.