2019 ஆம் ஆண்டின் சர்வதேச அமைதிக் குறியீட்டில் 163 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 5 இடங்கள் சரிந்து 141-வது இடத்தில் உள்ளது.
மிகவும் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தொடர்ந்து நீடித்து வருகின்றது. மிகவும் அமைதியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் விளங்குகின்றது.
பூடான் நாடு இந்த அமைதிக் குறியீட்டில் 15-வது இடம் பிடித்து தெற்காசியாவில் முன்னிலையில் உள்ளது.
அந்தந்த நாடுகளில் நிலவும் அமைதி நிலையின்படி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிந்தனைச் சாவடியான “பொருளாதார மற்றும் அமைதி நிறுவனம்” நாடுகளைத் தரவரிசைப்படுத்தியுள்ளது.
இது சர்வதேச அமைதி நிறுவனங்கள் மற்றும் சிந்தனைச் சாவடிகளில் உள்ள சர்வதேச அமைதி வல்லுநர்கள் குழுவுடன் கலந்தாலோசித்துப் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவினால் (Economist Intelligence Unit - EIU) சேகரித்து வைக்கப்பட்ட தகவல்களுடன் இணைத்து உருவாக்கப்பட்டதாகும்.
தற்பொழுது நடைபெற்று வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பிரச்சனைகள், இராணுவமயமாக்கல், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நாடுகள் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளன.