9வது சர்வதேச அறிவுசார் சொத்து குறியீட்டில் (IIP – Intellectual Property Index) 53 உலகப் பொருளாதாரங்களில் 38.40 மதிப்புகள் பெற்று இந்தியா 40வது இடத்தில் உள்ளது.
“Recovery through Ingenuity 2021” என்று தலைப்பிடப்பட்ட இக்குறியீடு அமெரிக்க வர்த்தக மன்றத்தின் உலகளாவியப் புத்தாக்கக் கொள்கை மையத்தினால் (Global Innovation Policy Center – GIPC) வெளியிடப்பட்டது.
இக்குறியீட்டில் ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.
GIPC மையத்தினால் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் IIP குறியீடு, 53 உலகப் பொருளாதார நாடுகளில் அறிவுசார் சொத்துரிமை, காப்புரிமை மற்றும் நகலுரிமை கொள்கைகள், அறிவுசார் சொத்துகளை வணிகமயமாக்கல் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்தல் போன்றவற்றை மதிப்பீடு செய்கின்றது.
53 நாடுகளில் 32 நாடுகள் நேர்மறையான மதிப்புகளைப் பெற்றுள்ளதால் 2020 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்த உலகளாவிய அறிவுசார் சொத்துகளின் சூழ்நிலை மேம்பட்டு உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.