சர்வதேச அல்பினிசம் நோய் விழிப்புணர்வு தினம் - ஜூன் 13
June 17 , 2022 1161 days 505 0
அல்பினிசம் (தோல் வெளிறல்) நோய் உள்ளவர்களின் மனித உரிமைகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றைக் கொண்டாடுவதை இத்தினம் குறிக்கிறது
2022 ஆம் ஆண்டு சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினத்தின் கருத்துரு, "இந்த நோய் குறித்த விழிப்புணர்வினை அனைவரும் உணரும் விதமாக ஒன்றிணைந்துக் குரல் எழுப்புதல்" என்பதாகும்.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2015 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் வகையில், இத்தினத்தினை அனுசரிப்பதை பிரகடனப்படுத்தும் தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டது.
அல்பினிசம் என்பது பிறக்கும் போதே காணப்படும் ஒரு அரிய, தொற்றாத, மரபணு ரீதியாகப் பெறப்பட்ட ஒரு மரபணு மாறுபாட்டு நோயாகும்.