சமூக மேம்பாடு மற்றும் நிலைத்தன்மையில் ஆர்கான் மரத்தின் பங்கை எடுத்துக் காட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கொண்டாட்டமானது, ஆர்கான் மரமானது மொராக்கோ பேரரசின் வட்டார இனமாக உள்ள இதனை உலகிற்கு உணர்த்துவதற்கான மொராக்கோவின் முக்கிய முன்னெடுப்புகளை எடுத்துக் காட்டுகிறது.
ஆர்கான் மரம் (ஆர்கானியா ஸ்பினோசா) மொராக்கோவின் தென்மேற்கில் உள்ள துணை-சஹாரா பகுதியைச் சேர்ந்த ஒரு பூர்வீக இனமாகும்.
மொராக்கோ நாடானது உலகளவில் ஆர்கான் தொடர்பான பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளதால், ஆர்கான் மரங்கள் மொராக்கோ மற்றும் மொராக்கோ கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு இடத்தைக் கொண்டுள்ளன.