சர்வதேச ஆற்றல் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு நிலை குறித்த அறிக்கை
March 28 , 2019 2295 days 806 0
சர்வதேச ஆற்றல் நிறுவனமானது (International Energy Agency - IEA) சர்வதேச ஆற்றல் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது எரிபொருள்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள், ஆற்றல் திறன் மற்றும் கார்பன் உமிழ்வுகள் ஆகியவற்றின் மேம்பாடு மற்றும் உலகளாவிய போக்குகள் ஆகியவற்றை எடுத்துக் காட்டுகிறது.
2018 ஆம் ஆண்டில் உலக அளவில் ஆற்றல் நுகர்வானது 2.3 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. இது 2010 ஆம் ஆண்டு முதல் சராசரி வளர்ச்சி விகிதத்தை விட இரு மடங்காகும்.
இந்த அறிக்கையின்படி இந்தியாவின் ஆற்றல் தேவையானது உலக ஆற்றல் தேவையை விட முந்தி விட்டது.
ஆற்றல் தேவை வளர்ச்சியில் 70 சதவிகிதத்தை இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொண்டுள்ளன.
இவ்வாறு வளர்ச்சி விகிதம் இருந்தாலும் இந்தியாவில் ஒருவர் வெளியிடும் உமிழ்வுகளானது உலக சராசரியில் 40 சதவிகிதம் என்ற குறைந்த அளவிலேயே உள்ளது.