சர்வதேச இருதய மற்றும் இரத்தக் குழாய் சிகிச்சை முறை சர்வதேச தினம் - செப்டம்பர் 16
September 21 , 2024 369 days 213 0
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளை அறிவிக்க முடிவு செய்தது.
கல்வி மற்றும் வெகுஜன ஊடகங்கள் மூலம் இருதய நோய்கள் மற்றும் சிகிச்சை நடைமுறைகள், அது தொடர்பான சிக்கல்கள், அத்துடன் அதன் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் பற்றிய ஒரு பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதய நோய்கள் என்பது இதயம் மற்றும் அதன் இரத்த நாளங்களின் கோளாறுகளை உள்ளடக்கிய நோய்க் குழுவாகும்.
இது உலகளவில் ஏற்படும் பெரும்பாலான மரணத்திற்கு முக்கியக் காரணம் ஆகும்.
இதய நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் முக்கால் பங்கிற்கும் அதிகமானவை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன.