TNPSC Thervupettagam

சர்வதேச ஈய நச்சுத் தடுப்பு வாரம் 2026 – அக்டோபர் 18/24

October 27 , 2026 4 days 105 0
  • ஈய நச்சுத்தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறிப்பாக குழந்தைகளிடையே ஈயம் வெளிப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்தவும் 14வது சர்வதேச ஈய நச்சுத் தடுப்பு வாரம் (ILPPW) அனுசரிக்கப் பட்டது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "From Detection to Prevention” என்பதாகும்.
  • அசுத்தமான தூசி, மண், நீர், உணவு மற்றும் பிற பொருட்களை சுவாசிப்பதன் மூலமாகவோ அல்லது உட்கொள்வதன் மூலமாகவோ ஈயம் உடலுக்குள் நுழையும் போது முக்கியமாக ஈய நச்சுத்தன்மை ஏற்படுகிறது.
  • ஈயம் என்பது மூளை, சிறுநீரகங்கள், கல்லீரல், இருதய அமைப்பு மற்றும் இரத்தத்தை பாதிக்கக் கூடிய ஒரு ஒட்டுமொத்த நச்சுத்தன்மையாகும்; இது காலப்போக்கில் எலும்புகள் மற்றும் பற்களில் குவியலாம்.
  • ஈயம் சார்ந்த பெயிண்ட், சுரங்கம், உலோகம் உருக்குதல், மின்கலன் மறுசுழற்சி, அசுத்தமான மசாலாப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், பொம்மைகள், மட்பாண்டங்கள், மின்னணு கழிவுகள் மற்றும் அசுத்தமான நீர் ஆகியவை இதன் முக்கிய ஆதாரங்களில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்