சர்வதேச ஈய நச்சுத் தடுப்பு வாரம் 2026 – அக்டோபர் 18/24
October 27 , 2026 19 days 154 0
ஈய நச்சுத்தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறிப்பாக குழந்தைகளிடையே ஈயம் வெளிப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்தவும் 14வது சர்வதேச ஈய நச்சுத் தடுப்பு வாரம் (ILPPW) அனுசரிக்கப் பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "From Detection to Prevention”என்பதாகும்.
அசுத்தமான தூசி, மண், நீர், உணவு மற்றும் பிற பொருட்களை சுவாசிப்பதன் மூலமாகவோ அல்லது உட்கொள்வதன் மூலமாகவோ ஈயம் உடலுக்குள் நுழையும் போது முக்கியமாக ஈய நச்சுத்தன்மை ஏற்படுகிறது.
ஈயம் என்பது மூளை, சிறுநீரகங்கள், கல்லீரல், இருதய அமைப்பு மற்றும் இரத்தத்தை பாதிக்கக் கூடிய ஒரு ஒட்டுமொத்த நச்சுத்தன்மையாகும்; இது காலப்போக்கில் எலும்புகள் மற்றும் பற்களில் குவியலாம்.
ஈயம் சார்ந்த பெயிண்ட், சுரங்கம், உலோகம் உருக்குதல், மின்கலன் மறுசுழற்சி, அசுத்தமான மசாலாப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், பொம்மைகள், மட்பாண்டங்கள், மின்னணு கழிவுகள் மற்றும் அசுத்தமான நீர் ஆகியவை இதன் முக்கிய ஆதாரங்களில் அடங்கும்.