சர்வதேச உண்மை அறியும் உரிமை மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப் பட்டோரின் கண்ணியத்திற்கான தினம் 2026 – மார்ச் 24
March 27 , 2026 170 days 162 0
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மை அறியும் உரிமை மற்றும் அவர்களின் கண்ணியத்தைப் போற்றும் வகையில் இந்த நாள் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாள் 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் நிறுவப்பட்டது.
அநீதிக்கு எதிராகப் பேசியதற்காக 1980 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட ஆஸ்கார் அர்னால்போ ரோமெரோவை கௌரவிக்கும் விதமாக இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது.
இது சித்திரவதை மற்றும் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் போன்ற மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் கண்ணியத்தை வலியுறுத்துகிறது.