சர்வதேச உயிரியல் பன்முகத் தன்மை தினம் 2025 - மே 22
May 25 , 2025 187 days 210 0
இது புவியின் நம்ப முடியாத பல்வேறு வகையான உயிர்களைப் பாதுகாப்பதில் தங்கள் பங்கை வகிக்குமாறு அனைத்து மக்களுக்கும் ஒரு உலகளாவிய அழைப்பாகச் செயல் படுகிறது.
முதலில், உயிரியல் பன்முகத்தன்மைக்கான உடன்படிக்கையானது நடைமுறைக்கு வந்த நாளைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 29 ஆம் தேதியன்று இந்தத் தினமானது கொண்டாடப் பட்டது.
இருப்பினும், 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதியன்று, 1992 ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோ புவி உச்சி மாநாட்டில் உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவு கூரும் வகையில் இத்தினத்திற்கான தேதியானது மே 22 ஆக மாற்றப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Harmony with Nature and Sustainable Development" என்பதாகும்.