சர்வதேச உயிர்க்கோளக் காப்பகங்கள் தினம் - நவம்பர் 03
November 5 , 2024 323 days 229 0
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், மிகவும் நிலையான மேம்பாடு பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதிலும் உயிர்க்கோளக் காப்பகங்களின் முக்கியத்துவத்தை முன்னிலைப் படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
யுனெஸ்கோ பொது மாநாட்டின் 41வது அமர்வில் இது அறிவிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குன்மிங்-மாண்ட்ரியல் உலகளாவிய பல்லுயிர்ப் பெருக்கக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் தேசிய அளவில் நிர்ணயிக்கப் பட்ட இலக்குகளை அடைய உயிர்க்கோளக் காப்பகங்கள் பங்களிக்கின்றன.
தற்போது 136 நாடுகளில் மொத்தம் 759 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
இந்தியாவில் 18 அறிவிக்கப்பட்ட உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
இந்த உயிர்க்கோளக் காப்பகங்கள் என்பது மையம், இடையகம் மற்றும் மாற்றம் கொண்ட மண்டலங்களைக் கொண்டிருக்கின்றன என்ற நிலையில் ஒவ்வொன்றும் வளங்காப்பு மற்றும் மேம்பாட்டில் வெவ்வேறு பங்குகளை வகிக்கின்றன.