சர்வதேச உயிர்க்கோளக் காப்பகங்கள் தினம் - நவம்பர் 03
November 5 , 2022 1062 days 822 0
2022 ஆம் ஆண்டு நவம்பர் 03 ஆம் தேதியன்று, முதலாவது சர்வதேச உயிர்க்கோளக் காப்பகங்கள் தினமானது அனுசரிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற யுனெஸ்கோ பொது மாநாட்டின் 41வது அமர்வில் இது அறிவிக்கப்பட்டது.
மனிதன் மற்றும் உயிர்க்கோளம் (MAB) திட்டத்தின் 50வது ஆண்டு விழா நிறைவடைந்த இரண்டு ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தினையும் இது குறிக்கிறது.
மனிதன் மற்றும் உயிர்க்கோளம் (MAB) திட்டம் ஆனது 1971 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் தொடங்கப்பட்ட ஒரு அரசுகளுக்கிடையேயான அறிவியல்பூர்வமான திட்டமாகும்.
இது மக்களுக்கும் அவர்களின் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தச் செய்வதற்கான அறிவியல் தளத்தினை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக உயிர்க்கோளக் காப்பகங்கள் வலையமைப்பு அமைப்பானது, தற்போது உலகம் முழுவதும் 134 நாடுகளில் 22 எல்லை கடந்தத் தளங்களையும் உள்ளடக்கிய வகையில் 738 உயிர்க்கோளத் தளங்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோளக் காப்பகங்களில் 12 உயிர்க்கோளக் காப்பகங்கள் உலக உயிர்க்கோளக் காப்பகங்கள் வலையமைப்பு ஒரு பகுதியாக இடம் பெற்று உள்ளன.
இலங்கையில் 04 உயிர்க்கோளங்களும் மாலத்தீவில் 03 உயிர்க்கோளங்களும் உள்ளன.