சர்வதேச உலக பாம்புக்கடி விழிப்புணர்வு தினம் - செப்டம்பர் 19
September 22 , 2022 1061 days 367 0
இது உலகின் மிகப்பெரிய மறைக்கப்பட்ட சுகாதார நெருக்கடிகளில் ஒன்றினைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் தோராயமாக 5.4 மில்லியன் மக்கள் பாம்புக் கடியினால் பாதிக்கப் படுவதோடு, அவர்களில் 2.7 மில்லியன் பேர்களுக்கு விஷம் உள்ளேறி அதனால் அவர்களுக்குப் பாதிப்பும் ஏற்படச் செய்கிறது.
ஆண்டுதோறும், இதனால் 400,000 பேர் நிரந்தரமாக ஊனமாக்கப்படுகின்றனர் அல்லது பாதிக்கப்படுகின்றனர் என்பதோடு இது 83,000 முதல் 138,000 வரையிலான இறப்பு எண்ணிக்கைக்கும் இட்டுச் செல்கிறது.
இந்த விழிப்புணர்வு தினமானது உலகப் பாம்புக் கடி முன்னெடுப்பு அமைப்பு, சர்வதேச சுகாதார நடவடிக்கை அமைப்பு மற்றும் லில்லியன் லிங்கன் அறக்கட்டளை மூலமாக 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
உலகளவில் பதிவாகும் பாம்புக் கடியால் ஏற்படும் இறப்புகளில் ஏறத்தாழப் பாதியளவு இந்தியாவில் பதிவாகியுள்ளதோடு, ஒவ்வோர் ஆண்டும் 2.97 மில்லியன் பாம்புக் கடி வழக்குகளும் இங்குப் பதிவாகின்றன.
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மேலான மக்கள் தொகை எண்ணிக்கையினைக் கொண்ட பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் (தெலுங்கானா உட்பட), ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற எட்டு மாநிலங்களில் 70 சதவீத இறப்புகள் பதிவாகியுள்ளன.