சர்வதேச எரிசக்தி முகமை 2023 ஆம் ஆண்டு இடைக் கால எண்ணெய்ச் சந்தை அறிக்கை
July 20 , 2023 1069 days 661 0
சர்வதேச எரிசக்தி முகமையானது (IEA) பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவுடன் (PPAC) இணைந்து 2023 ஆம் ஆண்டின் இடைக் கால எண்ணெய்ச் சந்தை அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது, சர்வதேச எரிசக்தி முகமை எண்ணெய் 2023 – 2028 ஆம் ஆண்டிற்கான வழங்கீடு மற்றும் தேவை மாற்றம் என்ற தலைப்பில் வெளியிடப் பட்டு உள்ளது.
2028 ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகளின் எண்ணெய் தேவையானது மந்தநிலையைக் காணும் என்றும், எண்ணெய்த் தேவைகள் நிறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது
ஆனால் பெட்ரோலிய வேதியியல் மற்றும் விமானப் போக்குவரத்து துறைகள் அதிகப் படியான எண்ணெய்த் தேவைக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்குப் பிறகு போக்குவரத்து துறைக்கான எண்ணெய் நுகர்வு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2028 ஆம் ஆண்டிற்குள் புதிய திரவ எரிபொருள் விநியோக உயர்வில் உயிரி எரிபொருள்கள் 10% பங்கினைக் கொண்டிருக்கும் என்று இந்த அறிக்கை குறிப்பிடச் செய்கிறது.
2022 ஆம் ஆண்டிலிருந்து 2028 ஆம் ஆண்டிற்குள் உயிரி எரிபொருள் உற்பத்தியானது ஒரு தினத்திற்குக் கிட்டத்தட்ட 600 பீப்பாய்களாக உயரும்.
இந்த அதிகரிப்பில் பிரேசில், இந்தோனேஷியா மற்றும் இந்தியா ஆகியவற்றின் பங்கு 70% ஆகும்.