சர்வதேச எழுத்தறிவு தினத்தின் 60வது ஆண்டு விழா 2026 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் படுகிறது, இதற்கான உலகளாவியக் கொண்டாட்டத்தை மெக்சிகோ நடத்துகிறது.
எழுத்தறிவின்மையை ஒழிப்பது தொடர்பான 1965 ஆம் ஆண்டு தெஹ்ரான் மாநாட்டைத் தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ தனது 14வது பொது மாநாட்டின் போது சர்வதேச எழுத்தறிவு தினத்தைப் பிரகடனப்படுத்தியது.
இதன் முதல் அனுசரிப்பு 1967 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது, அதே ஆண்டில் ஐ.நா பொருளாதார மற்றும் சமூக சபை (ECOSOC) இந்த அனுசரிப்புக்கு ஒப்புதல் அளித்தது.
யுனெஸ்கோவின் சர்வதேச எழுத்தறிவு பரிசுகளில் 'அரசர் செஜோங் எழுத்தறிவு பரிசு' மற்றும் 'கான்பியூசியஸ் எழுத்தறிவு பரிசு' ஆகியவை அடங்கும், இதில் ஆண்டுதோறும் ஆறு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில், உல்லாஸ் (ULLAS) திட்டமானது டிஜிட்டல் எழுத்தறிவு, நிதி எழுத்தறிவு, வாழ்க்கை திறன்கள் மற்றும் வாழ்நாள் கற்றல் ஆகியவற்றுடன் வயதுவந்தோர் எழுத்தறிவையும் ஊக்குவிக்கிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Literacy for people, the planet and prosperity என்பதாகும்.