TNPSC Thervupettagam

சர்வதேச எழுத்தறிவு தினம் 2026 - செப்டம்பர் 08

September 10 , 2026 3 days 63 0
  • சர்வதேச எழுத்தறிவு தினத்தின் 60வது ஆண்டு விழா 2026 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் படுகிறது, இதற்கான உலகளாவியக் கொண்டாட்டத்தை மெக்சிகோ நடத்துகிறது.
  • எழுத்தறிவின்மையை ஒழிப்பது தொடர்பான 1965 ஆம் ஆண்டு தெஹ்ரான் மாநாட்டைத் தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ தனது 14வது பொது மாநாட்டின் போது சர்வதேச எழுத்தறிவு தினத்தைப் பிரகடனப்படுத்தியது.
  • இதன் முதல் அனுசரிப்பு 1967 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது, அதே ஆண்டில் ஐ.நா பொருளாதார மற்றும் சமூக சபை (ECOSOC) இந்த அனுசரிப்புக்கு ஒப்புதல் அளித்தது.
  • யுனெஸ்கோவின் சர்வதேச எழுத்தறிவு பரிசுகளில் 'அரசர் செஜோங் எழுத்தறிவு பரிசு' மற்றும் 'கான்பியூசியஸ் எழுத்தறிவு பரிசு' ஆகியவை அடங்கும், இதில் ஆண்டுதோறும் ஆறு விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • இந்தியாவில், உல்லாஸ் (ULLAS) திட்டமானது டிஜிட்டல் எழுத்தறிவு, நிதி எழுத்தறிவு, வாழ்க்கை திறன்கள் மற்றும் வாழ்நாள் கற்றல் ஆகியவற்றுடன் வயதுவந்தோர் எழுத்தறிவையும் ஊக்குவிக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Literacy for people, the planet and prosperity என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்