எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய நேபாளத்தின் தென்சிங் நோர்கே மற்றும் நியூசிலாந்தின் எட்மண்ட் ஹிலாரி ஆகியோரின் நினைவாக சர்வதேச எவரெஸ்ட் தினமானது மே 29 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகின்றது.
1953 ஆம் ஆண்டில் இதே நாளில் தான் மனிதர்கள் முதன்முறையாக இந்த உயரத்தை அடைந்தனர்.
2008 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற மலையேறும் வீரரான ஹிலாரி உயிரிழந்ததை அடுத்து நேபாள அரசு இந்த நாளை சர்வதேச எவரெஸ்ட் தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.