சர்வதேச ஒட்டுமொத்த அணு ஆயுத ஒழிப்பு தினம் - செப்டம்பர் 26
September 28 , 2018 2637 days 1195 0
சர்வதேச ஒட்டுமொத்த அணு ஆயுத ஒழிப்பு தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 அன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலகளாவிய அளவில் அணுசக்தி ஆயுதங்களை குறைப்பதே மிக முக்கியம் என்பதை உலக சமுதாயத்திற்கு மீள்வலியுறுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாளானது டிசம்பர் 2013-ல் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் பிரகடனம் செய்யப்பட்டது.
மேலும் ஐ.நா பொதுச் சபையானது ஆகஸ்ட் 29-ம் தேதியை அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச நாளாக அனுசரிக்கிறது. இது 2009ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பிரகடனப்படுத்தப்பட்டது.