இந்த தினமானது கோடைக்கால மற்றும் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை உள்ளடக்கிய வகையிலான நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகளைக் குறிக்கிறது.
ஒலிம்பிக் தினமானது மூன்று தூண்களின் அடிப்படையில் கடைபிடிக்கப் படுகிறது. அவையாவன
இயக்கம் (Move)
கற்றல் (Learn)
கண்டறிதல் (Detect) என்பவையாகும்
உலக ஒலிம்பிக் தினமானது 1948 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது 1894 ஆம் ஆண்டு ஜுன் 23 அன்று நவீன கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப் பட்டதை நினைவு கூரும் வகையில் தொடங்கப்பட்டதாகும்.
நவீனகால ஒலிம்பிக் கோட்டிகள் பாரீசின் சார்பான் (Sorbonne) என்னுமிடத்தில் தொடங்கப் பட்டன.
2021 ஆம் ஆண்டின் இந்த தினத்திற்கான கருத்துரு, “Stay Healthy, Stay Strong, Stay Active with the Olympic Day Workout on 23 June” என்பதாகும்.