ஊட்டச்சத்து, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு கடற்பாசியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடற்பாசி என்பது வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்சிசனேற்ற எதிர்ப்புப் பொருட்கள் / ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அயோடின் ஆகியவற்றைக் கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த ஒரு கடல் தாவரமாகும்.
இது நன்னீர், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் அல்லது விவசாய நிலம் இல்லாமல் வளர்கிறது, இதனால் இது ஒரு சுற்றுச்சூழலுக்கு உகந்த வளமாக மாறுகிறது.
கடற்பாசி கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறது, கடல் மாசுபாட்டைக் குறைக்க உதவுகிறது மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தை வழங்குவதன் மூலம் கடல் பல்லுயிரியலை ஆதரிக்கிறது.
இது உணவு, கால்நடைத் தீவனம், உயிரி எரிபொருள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மக்கும் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.