சர்வதேச கடல்பசு/டுகோங் வளங்காப்பு மையம் ஆனது தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்காவில் உள்ள சரபேந்திரராஜன்பட்டினம் கிராமத்தில் அமைக்கப் பட வனத்துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஆனது கட்டுமானம் தடை செய்யப்பட்டுள்ள CRZ III (மேம்பாடுகள் இல்லாத மண்டலம்) உட்பட பல கடலோர ஒழுங்குமுறை மண்டலங்களுக்குள் (CRZ) அமைந்துள்ளது.
முன்மொழியப்பட்ட பகுதியானது சுமார் 23,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டு உள்ளது.
இதில் அருங்காட்சியகம், அரங்கம், சுற்றுச்சூழல் மையம் மற்றும் காட்சிப் பாதைகள் போன்ற ஆராய்ச்சி, கல்வி மற்றும் பொழுதுபோக்கு உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.
இந்த இடமானது சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் கொண்ட மற்றும் 2011 ஆம் ஆண்டு CRZ அறிவிப்பின் கீழ் பாதுகாக்கப் படுகின்ற கடல் புல் படுகைகள், ஓத ஆறுகள் மற்றும் சதுப்புநிலக் காடுகளுக்கு அருகில் உள்ளது.