2025 ஆம் ஆண்டின் 66வது சர்வதேச கணித ஒலிம்பியாட் (IMO) போட்டியானது ஆஸ்திரேலியாவின் சன்ஷைன் கோஸ்டில் நடைபெற்றது.
இந்திய அணி 3 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கத்தைப் வென்றுள்ளது.
இதற்கு முன்னர் 1998 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் சிறந்த தரவரிசையை பெற்றது போலவே இந்த ஆண்டும் இப்போட்டியில் பங்கேற்ற 110 நாடுகளில் இந்தியா ஏழாவது இடத்தைப் பிடித்தது.
IMO போட்டியில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களை வெல்வது இது இரண்டாவது முறையாகும் என்பதோடு முதல் முறையாக 1998 ஆம் ஆண்டில் அதனைப் பெற்றது.
IMO போட்டியில் 2023 ஆம் ஆண்டில் 9வது இடத்தையும், 2024 ஆம் ஆண்டில் 4வது இடத்தையும், 2025 ஆம் ஆண்டில் 7வது இடத்தையும் பிடித்து இந்தியாவானது முதல் 10 இடங்களுக்குள் இடம் பெறுவது இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகும்.